எனது கல்லூரி நாட்களிலிருந்தே எனக்குள் கணினி பற்றிய ஏராளமான கற்பனைகள் மற்றும் கனவுகள். program codeகளை பார்க்கும் போதெல்லாம் எனக்குள் இதை எழுதியவர்களெல்லாம் பெரிய அறிவாளிகள் என்றும், நானும் அதுபோல் ஒருநாள் கணிப்பொறியை என் program கள் மூலம் இயக்க வேண்டும் என்ற தீராத அவா இருந்துவந்தது. நான் வங்கியில் சேர்ந்த 90 களில் கணினி மயமாக்கம் துவங்கியிருந்த நேரம். தூக்க முடியாமல் ledger-களை புரட்டி அதில் entry போடுவது பெரிய உடற்பயிற்சியாக இருந்த காலம் அது. Scientific Calculator-கள் மட்டுமே பெரிய விஷயமாக இருந்த நாட்கள்.